நாளையதினமும் போராட்டத்தில் ஈடுபடவுள்ள இலங்கை ஆசிரியர் சங்கம்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
நாளையதினமும் போராட்டத்தில் ஈடுபடவுள்ள இலங்கை ஆசிரியர் சங்கம்!

தமது கோரிக்கைகளுக்கு விரைவில் பதில் வழங்குமாறு கோரி ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு நாளை (02.07) பாடசாலைகளுக்கு முன்பாக போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

பாடசாலை நேரத்தின் பின்னர்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.  

 எதிர்வரும் வெள்ளிக்கிழமை அரச துறையில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒன்று திரட்டி ஆசிரியர் – அதிபர் கூட்டணியாக ஒன்றிணைக்க தாம் தயாராக உள்ளதாக அவர்கள் மேலும் கருத்து தெரிவித்தனர். 

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு, தொழில்சார் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், பெற்றோர்கள் இந்த நிலைமையை புரிந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4