எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் லிட்ரோ நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் லிட்ரோ நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!

எரிவாயு விலை திருத்தம் இன்று (02) அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.  

உலக சந்தையில் உள்ள எரிவாயு விலைக்கு ஏற்ப இந்த விலை திருத்தம் செய்யப்பட உள்ளதாக அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார். 

மாதாந்திர எரிவாயு விலை திருத்தத்தின்படி, ஜூன் 4 ஆம் திகதி கடைசியாக எரிவாயு விலை திருத்தம் செய்யப்பட்டது. 

இதன்போது12.5 கிலோகிராம் எடையுள்ள வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 150 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் தற்போதைய விலை 3,790 ரூபாவாகும்.  

5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 60 ரூபாவாலும், 2.3 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 28 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4