இணையத்தில் வலம் வரும் போலி கடிதம் : பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
இணையத்தில் வலம் வரும் போலி கடிதம் : பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!

சமூக ஊடகங்களில் பரவிவரும் போலி கடிதம் தொடர்பில் பொலிஸ் தலைமையகம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பான கடிதம் மஞ்சள் பின்னணியில் நீல நிற பொலிஸ் கையொப்பத்துடன் தர்மசக்கரம், ரப்பர் முத்திரை மற்றும் பொலிஸ் உத்தியோகபூர்வ சின்னத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன், 2024 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் திகதி வெளியிடப்பட்டதாகத் தோன்றும் வகையில் ஆங்கிலத்தில் உள்ள கடிதமே இவ்வாறு ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இக்கடிதமும் அதன் உள்ளடக்கமும் முற்றிலும் போலியான கடிதம் எனவும், இலங்கை பொலிஸாரோ அல்லது அதனுடன் இணைந்த நிறுவனங்களினாலோ இவ்வாறான கடிதம் எதுவும் வெளியிடப்படவில்லை என பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

போலி கடிதம் மற்றும் இணையத்தில் கடிதம் பிரசுரம் செய்யப்பட்டமை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4