இரா.சம்பந்தனின் நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிப்பு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
இரா.சம்பந்தனின் நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிப்பு!

இலங்கை. தமிழ் அரசியலில் மூத்த அரசியல்வாதியும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாளர் தலைவரும், இலங்கையினுடைய எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்த திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் இராசவரோதயம் சம்பந்தன் அவர்களுடைய நினைவேந்தல் நிகழ்வு இன்றைய ( 02.07) தினம் பிற்பகல் 5 மணியளவில் இலங்கை தமிழரசு கட்சியின் மந்திகை மடத்தடியிலுள்ள வடமராட்சி கிளைக்காரியாலயத்தில் இலங்கை தமிழர் கட்சி வடமராட்சி முக்கியஸ்தர் லவன் தலைமையில் இடம் பெற்றது.

இதில் முதல் நிகழ்வாக அமரர் இராஜவரோதயம் சம்பந்தன் அவர்களுக்கும், யுத்தத்தில் மரணித்த மக்களுக்காகவும் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு பின்னர் ஈகைச் சுடர்கள் ஏற்றி வைக்கப்பட்டது.  

ஈகைச் சுடர்களினை முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான தர்மலிங்கம், சந்திரலிங்கம் சுகிர்தன் மற்றும் இலங்கை தமிழரசு கட்சியின் வடமராட்சி உறுப்பினர்கள் உட்பட பலரும் ஏற்றியதை தொடர்ந்து மலர் அஞ்சலி நிகழ்வு இடம் பெற்றது. 

 இதேவேளை இலங்கை தமிழரசு கட்சியின் கொடி துக்கத்தை அனுஸ்டிக்கும் முகமாக அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.  

இந்நிகழ்வில் வடமராட்சி. பகுதிக்குட்பட்ட இலங்கை தமிழரசு கட்சியின் முக்கியஸ்தர்கள் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4