நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. 

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள், வலத்கலை மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 50 மி.மீற்றகர்களில் அதிகபட்சமாக மழை பெய்யும். அதேபோல் வடமேற்கு மாகாணத்தில் பல மழைக்காலங்கள் உள்ளன.  

ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.  

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும்  வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 40-50 கிலோமீற்றர் வேகத்திலும் காற்று வீசக்கூடும் எனவும் முன்னுரைக்கப்பட்டுள்ளது. 

இடியுடன் கூடிய மழை,  தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4