இந்தியாவில் மத வழிப்பாட்டின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
3 months ago
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் இந்து சமயப் பண்டிகையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 116 ஆக உயர்ந்துள்ளது.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மதச்சடங்கு முடிந்ததும், கூட்டம் ஒரே நேரத்தில் கலைந்து செல்ல முயன்ற நிலையில் மேற்படி அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
இதில் உயிரிழந்த நபர்களுக்கு 02 இலட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
தற்போதும் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.