மூன்று மாதங்களுக்குள் இனப்பிரச்சனைக்கு தீர்வு: ஜனாதிபதிக்கு காலக்கெடு விதித்த சுமந்திரன்

#SriLanka #Sri Lanka President #M. A. Sumanthiran
Mayoorikka
2 years ago
மூன்று மாதங்களுக்குள் இனப்பிரச்சனைக்கு தீர்வு: ஜனாதிபதிக்கு காலக்கெடு விதித்த சுமந்திரன்

சம்பந்தனின் ஆயுட் காலத்திலேயே தமிழ்த் தேசியப் பிரச்சினை தீர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்று இங்கு ஜனாதிபதி கூறினார். ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவதற்கு இன்னும் 3 மாதங்கள் உள்ளநிலையில் அதாவது இந்த வருடம் ஒக்டோபர் முடிவதற்கு முன்னர் இந்தப் பிரச்சினையை ஜனாதிபதி தீர்த்து வைக்க வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட எம்.பி.யான எம்.ஏ.சுமந்திரன் வேண்டுகோள் விடுத்தார்.

 பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (02) பெருந்தலைவர் சம்பந்தனின் மறைவு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ,எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் அனுதாபம் தெரிவித்து உரையாற்றிய பின்னரே இவ்வாறு வேண்டுகோள் விடுத்த சுமந்திரன் எம்.பி. மேலும் பேசுகையில், 

 சம்பந்தனின் மறைவு தொடர்பாக அனுதாபம் வெளியிட்டமைக்கு ஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன். ஜனாதிபதி தனது உரையின் போது தானும், சம்பந்தனும் ஒன்றாக பாராளுமன்றம் நுழைந்தமை தொடர்பில் குறிப்பிட்டதுடன், சம்பந்தனின் ஆயுட் காலத்திலேயே தமிழ்த் தேசியப் பிரச்சினை தீர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், துரதிஷ்டவசமாக அவர் மறைந்துவிட்டார் எனவும் கூறினார்.

 இந்நிலையில் நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி கூறுவது என்னவென்றால் தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவதற்கு முன்னர் அதாவது இந்த வருடம் ஒக்டோபர் முடிவதற்கு முன்னர் இந்தப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்று வினயமாக கேட்கின்றேன். நாட்டு மக்கள் அனைவரும் திருப்தியடையும் வகையில் இந்தப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4