பிரித்தானியாவின் பொதுத் தேர்தல் இன்று!
பிரித்தானிய நாடாளுமன்ற பொதுத் தேர்தல் இன்று (04.07) நடைபெறவுள்ளது.
வாக்குப்பதிவு காலை 7:00 மணிக்கு தொடங்கி இரவு 10:00 மணி வரை நடைபெறும்.
இம்முறை ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மே 22 அன்று, பிரதமர் ரிஷி சுனக் நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலை நடத்த வாய்ப்பளித்தார்.
பிரதமர் ரிஷி சுனக் கன்சர்வேட்டிவ் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தியும், எதிர்க்கட்சி தலைவர் கெய்ர் ஸ்டார்மர் தொழிலாளர் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தியும் போட்டியிடுகின்றனர்.
பொதுத் தேர்தலில் 650 எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இந்நிலையில் வெளியாகியுள்ள இறுதி கருத்துகணிப்பில் கன்சர்வேட்டிவ் கட்சியன் 14 வருட ஆட்சி சரியும் எனக் கூறப்படுகிறது.
எதிர்பாராத விதமாக தொழிற்கட்சி அமோக வெற்றிப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கணிப்பின்படி தொழிற்கட்சி வெற்றிபெரும் பட்சத்தில் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு பெரும் தலைவலியாக உள்ள ருவாண்டாவிற்கு நாடுகடத்தப்படும் திட்டம் இடைநிறுத்தப்படலாம்.
மாறாக கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றிபெரும் பட்சத்தில் ருவாண்டா திட்டம் கடுமையாக அமுற்படுத்தப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.