கொழும்பு வாழ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
கொழும்பில் இன்று (04.07) இரவு 9 மணி முதல் 18 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, கொலன்னாவ நகரசபை எல்லை, கடுவெல நகரசபை எல்லை, முல்லேரியா மற்றும் கொட்டிகாவத்தை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளுக்கு 18 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.
அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து நீர் விநியோகிக்கப்படும் நீர் குழாயின் அவசர பராமரிப்பு காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே