பிரித்தானியாவின் பிரதமர் மாற்றம்?
பிரிட்டன் நாட்டில் பாராளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று [ஜூன் 4] நடந்து முடிந்தது. பிரிட்டனில் மொத்தம் உள்ள 650 பாராளுமன்றத் தொகுதிகளிலும் நேற்று பதிவான வாக்குகளை என்னும் பணி தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.
தற்போதைய நிலவரப்படி இந்திய வம்சாவளி பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி 2 இடத்திலும் பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி 17 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. லிபரல் டெமாக்கிரட்ஸ் கட்சி 2 இடத்தில் முன்னிலை வகிக்கிறது.
இந்த தேர்தலில் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி படுதோல்வி அடையும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. மொத்தம் உள்ள 650 தொகுதிகளில் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி வெறும் 131 இடங்களில் மட்டுமே வெற்றிபெறும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.
மாறாக இடதுசாரியான தொழிலாளர் கட்சி 410 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் பட்சத்தில் கெயர் ஸ்டேமர் பிரிட்டன் பிரதமராக பதவியேற்பார் என்று தெறிகிறது.
பிரிட்டனில் 40 வருடங்களுக்கு பிறகு ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையால் முந்தைய பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த 2022 ஆம் ஆண்டு பதிவு விலகிய நிலையில் புதிய பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்த்த வலதுசாரியான ரிஷி சுனக் பிரதமராக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.