ஜனாதிபதித் தேர்தலை பிற்போட வேண்டும்! விக்னேஸ்வரன்

#SriLanka #Election #C V Vigneswaran
Mayoorikka
2 years ago
ஜனாதிபதித் தேர்தலை பிற்போட வேண்டும்! விக்னேஸ்வரன்

ஜனாதிபதி தேர்தலை பிற்போட வேண்டும் என்பதே எனது கருத்து என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். 

 இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தேசிய அரசாங்கம் அமைப்பது நாட்டுக்கு நல்லது. ஆனால் தமிழ்க் கட்சிகள் தேசிய அரசாங்கத்தில் இணைவது பொருத்தமானதல்ல. தமிழ் மக்களின் பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கக்கூடிய தேசிய அரசாங்கத்தை தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைக்க வேண்டும் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன்.

 அத்தோடு இப்போது தேர்தல் நடைபெற்றால் எந்த வேட்பாளரும் 50% வாக்குகளைப் பெற முடியாது, பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு நிலையான ஆட்சி அமைய வேண்டும். ஆனால்,தற்பொழுது தேர்தல் நடைபெற்று குறுகிய காலத்தில் ஆட்சி மாறினால் பாரிய பிரச்சினை ஏற்படும். 

 இந்த நாட்டில் இன்னொரு பிரச்சினை ஏற்பட்டால், நாட்டை மீட்க முடியாது. மக்களின் பாதுகாப்புத் தொடர்பிலும் நாம் சிந்திக்க வேண்டும். ஆகவே, தேர்தலை பிற்போட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4