பிரிட்டனில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சி மாற்றம்: கைப்பற்றிய தொழிலாளர் கட்சி
பிரிட்டனில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு தொழிலாளர் கட்சி ஆட்சியைப் பிடித்திருக்கிறது.
பிரிட்டன் தேர்தல் வரலாற்றில் மோசமான ஒரு தோல்வியை கன்சர்வேடிவ் கட்சி சந்தித்திருக்கிறது என பிரித்தானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதன் மூலம் புதிய பிரதமராக கெய்ர் ஸ்டார்மர் பதவியேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
2020-இல் தொழிலாளர் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் ஸ்டார்மர்.
தொழிலாளர் கட்சி மொத்தமுள்ள 650 இடங்களில் 330-க்கும் அதிகமான இடங்களை வென்றுவிட்டது.
தொழிலாளர் கட்சி மகத்தான வெற்றியை பெற்றுள்ளதோடு அக்கட்சி 410 ஆசனங்களை பெறும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் கட்சி வெற்றி பெற தேவையான 326 ஆசனங்களை எட்டிய பிறகு, கட்சி ஆதரவாளர்களிடம் கெய்ர் ஸ்டார்மர் உரையாற்றியுள்ளார்.
வாக்களித்த மக்களுக்கு நன்றி கூறிய அவர், இது ஒரு பெரிய பொறுப்பு எனவும் நீங்கள் எங்கள் நாட்டை மாற்றிவிட்டீர்கள் எனவும் கூறியுள்ளார்.
மகிழ்ச்சி மிகுந்த தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய கீர் ஸ்டார்மர், "நாம் சாதித்துவிட்டோம்" என்று குறிப்பிட்டார். "மாற்றம் இப்போது தொடங்குகிறது" என்று கூறினார் ஸ்டார்மர்.
தோல்வியை ஒப்புக் கொண்டு அதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்வதாக ரிஷி சூனக் தெரிவித்துள்ளார்.