தேசிய போட்டிகளில் பங்குபெறும் வடக்கு மாகாண நீச்சல் அணி

#Kilinochchi #competition #Swim #national
Prasu
2 years ago
தேசிய போட்டிகளில் பங்குபெறும் வடக்கு மாகாண நீச்சல் அணி

வட மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் மாகாண நீச்சல் அணி இரண்டாவது தடவையாக தேசியப் போட்டிகளில் பங்குபற்றதற்காக கொழும்பு செல்கின்றது.

அவர்களை வாழ்த்தி வழியனுப்பும் நிகழ்வு இன்று கிளிநொச்சி விளையாட்டு கட்டடத் தொகுதியில் விளையாட்டு பயிற்றுனர் பசுபதி ஆனந்தராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் எம் ஆர் மோகனதாஸ், கிளிநொச்சி மாவட்ட விளையாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் சுரேந்திரன், விளையாட்டு பயிற்றுனர் ஆசைநாதர், விளையாட்டு உத்தியோகத்தர் போல்ராஜ் மற்றும் எதிர்பாராத விதமாக நிகழ்வில் கலந்துகொண்டு நிகழ்வை கௌரவித்த உதைப்பந்தாட்ட பயிற்றுநர் முகுந்தன் ஆகியோர்களுடன் விளையாட்டு வீரர்களின் பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகள் கலந்து கொண்டனர்.

 தேசிய போட்டிகளில் கலந்து கொள்ளும் வட மாகாண நீச்சல் அணியினை நாமும் வாழ்த்துவோம்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!