ரொறன்ரோவில் எலி தொல்லை அதிகரிப்பு
கனடாவின் ரெறான்ரோ நகரில் எலி தொல்லை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ரொறன்ரோ நகர சபையின் இரண்டு உறுப்பினர்கள் இது தொடர்பில் விசேட கோரிக்கை ஒன்றை முன் வைத்துள்ளனர்.
எலிகளை கட்டுப்படுத்துவதற்கு திட்டம் ஒன்று வகுக்கப்பட்டு அமுல்படுத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எலிகள் அங்கும் இங்கும் அலைந்து திரிவதாகவும் அதிக எண்ணிக்கையிலான எலிகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 10 ஆண்டுகளாகவே இவ்வாறு எலித்தொல்லை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக கட்டுமான பணிகள் அதிகரித்துள்ளதாகவும், மக்கள் நடை பாதைகளின் ஓரத்தில் குப்பைகளை குறிப்பாக உணவு பொருட்களை போடுவதனால் எலிகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இரவு நேரங்களில் நடைபாதைகளில் எலிகள் அங்கும் இங்கும் ஓடுவதனை அவதானிக்க முடிவதாக தெரிவிக்கின்றனர்.
அதிகளவு வீடுகள் நிர்மாணிக்கப்படுவதாகவும் இதனால் எலித் தொல்லை மேலும் அதிகரிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எலித் தொல்லையை இல்லாது ஒழிப்பதற்கு கூட்டு முயற்சியை அவசியம் எனவும் கிரமமான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.