சண்டைக்கட்சிகளால் பாதியில் வெளியேறிய கே.பாலச்சந்தர் - மீதி படத்தை இயக்கியது யார்?

#TamilCinema #Director #Old #Movie #Kollywood
Prasu
4 months ago
சண்டைக்கட்சிகளால் பாதியில் வெளியேறிய கே.பாலச்சந்தர் - மீதி படத்தை இயக்கியது யார்?

சண்டைக்காட்சிகள் இருப்பது பிடிக்காத கே.பாலச்சந்தர் தனது படத்தின் படப்பிடிப்பில் இருந்து பாதியில் வெளியேறியுள்ளார்.

சண்டை காட்சிகளை விரும்பாத இயக்குனர் கே.பாலச்சந்தர், தனது படத்தின் படப்பிடிப்பில் இருந்து பாதியில் வெளியேறிய நிலையில், அவரது உதவியாளர்கள் சண்டைக்காட்சி மற்றும் கிண்டல் செய்யும் வகையில் அமைந்த பாடல் காட்சிகளை படமாக்கியுள்ளனர்.

தமிழ் சினிமாவில் உறவுகளுக்குள் இருக்கும் சிக்கல்களை மையமாக வைத்து அதற்கு திரைக்கதை அமைத்து படங்கள் இயக்கியவர் கே.பாலச்சந்தர். 

இயக்குனர் சிகரம் என்று போற்றப்படும் இவர், தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்திருந்தாலும், இவர் சினிமாவுக்கு வந்த காலக்கட்டத்தில் முன்னணி நடிகர்களாக இருந்த எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகிய இருவரை அனுகவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

images/content-image/1720216909.jpg

அதே சமயம் சிவாஜி நடிப்பில் ஒரு படத்தை மட்டுமே இயக்கியிருந்தார். எதிரொலி என்ற பெயரில் வெளியான இந்த படம் நெகடீவ் விமர்சனங்களை பெற்றதாக தகவல்கள் வெளியானது. 

ஆரம்பத்தில் தனது படங்களுக்கு, தான் நாடகங்களில் பணியாற்றும்போது நெருங்கிய நட்புடன் இருந்த வி.குமார் என்பவரை இசையமைப்பாளராக பயன்படுத்திக்கொண்ட பாலச்சந்தர், அடுத்து எம்.எஸ்.விஸ்வநாதனுடன் பல படங்களில் பணியாற்றியுள்ளார்.

அதன்பிறகு 1970-களின் இறுதியில் இளையராஜா தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆகி வரவேற்பை பெற்று வந்த காலக்கட்டங்களிலும், பாலச்சந்தர் எம்.எஸ்.வியுடன் பணியாற்றி பல வெற்றிகளை குவித்து வந்தார். 

சிந்து பைரவி படத்தின் மூலம் இளையராஜாவுன் இணைந்த பாலச்சந்தர், அடுத்து சில ஆண்டுகளில் அவரை விட்டு பிரிந்து ஏ,ஆர்.ரஹ்மானை இசையமைப்பாளராக அறிமுகமுகப்படுத்தியுள்ளார். 

images/content-image/1720216920.jpg

இந்த கூட்டணியில் கடந்த 1994-ம் ஆண்டு வெளியான படம் தான் டூயட். பிரபு, ரமேஷ் அரவிந்த் இணைந்து நடித்த இந்த படத்திற்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, அனைத்து பாடல்களையும் கவிஞர் வைரமுத்து இயக்கியுள்ளார். 

பொதுவாக தனது படங்களில் கதைக்கு மட்டுமே முக்கியத்தவம் கொடுக்கும் கே.பாலச்சந்தர், சண்டை காட்சிகள் மற்றும் கிண்டல் செய்வது போன்ற பாடல்களை இடம்பெற அனுமதிப்பதில்லை. 

ஆனால் டூயட் படத்தின் ஷூட்டிங்கின்போது, அவரது உதவி இயக்குனர்கள் கே.பாலச்சந்தரிடம் பல ஆலோசனைகளை கூறியுள்ளனர். நீங்கள் அந்த காலத்தில் எடுத்தது போன்ற படங்களை இப்போது எடுக்க முடியாது. 

இந்த படம் கமர்ஷியலா வெற்றி பெற வேண்டும் என்றால், சண்டைக்காட்சிகள் இருக்க வேண்டும். கிண்டல் செய்வது போன்ற இந்த பாடல் இடம்பெற வேண்டும் என்று கூறியுள்ளனர். 

images/content-image/1720216930.jpg

ஆனால் இதில் உடன்பாடு இல்லாத பாலச்சந்தர், படத்தின் கதைக்கு தேவையாக காட்சிகளை மட்டும் படமாக்கிவிட்டு அங்கிருந்து கிளம்ப, அவரது உதவியாளராக இருந்த இயக்குனர் சரண் சண்டைக்காட்சிகள் மற்றும் கத்தீரிக்கா குண்டு கத்திரிக்கா என்ற கிண்டல் செய்யும் பாடல் காட்சிகளை இயக்கியுள்ளார்.

அதேபோல், தனது படத்தின் பாடல்களில் வரிகளுக்கு முக்க்கியத்துவம் கொடுக்கும் கே.பாலச்சந்தர், இந்த படத்தில் வரும் ‘’தங்கமே தமிழுக்கில்லை கட்டுப்பாடு’’ என்ற பாடலை எழுதும்போது, கவிஞர் வைரமுத்து கேட்டுக்கொண்டதை தொடர்ந்து உங்கள் விருப்பத்திற்கு எழுதுங்கள் என்று கூறியுள்ளார். 

அந்த வகையில் வைரமுத்து தனக்கு தோன்றிய வரிகளை அமைத்து எழுதிய பாடல் தான் இது. இந்த படமும் பாடல்களும் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!