இணைய மோசடிகள் தொடர்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
கணினி அவசரகால பதிலளிப்பு மன்றத்தின் படி, ஆண்டின் கடந்த 5 மாதங்களில் இணைய மோசடி தொடர்பாக 1,093 புகார்கள் பதிவாகியுள்ளன.
சமூக ஊடகங்கள் தொடர்பில் 7,916 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக அதன் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுகல தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் விளக்கமளித்த சாருக தமுனுகல, இரண்டு மாதங்களுக்குள் சிறுவர்கள், குறிப்பாக சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் 27 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டார்.
குறித்த முறைப்பாடுகள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே