2 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தனுஷ்கோடியில் தஞ்சம்!

#SriLanka #Mannar #Tamil Nadu
Mayoorikka
2 years ago
2 குழந்தைகள் உட்பட  ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர்    தனுஷ்கோடியில் தஞ்சம்!

தலைமன்னாரிலிருந்து தாய் மற்றும் 2 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் அகதிகளாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (5) காலை தனுஷ்கோடியை சென்றடைந்தனர்.

 தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த யோக வள்ளி (வயது-34),அவரது பிள்ளைகளான அனுஜா (வயது-08),மிஷால் (வயது-05) ஆகியோர் தலைமன்னாரிலிருந்து படகில் புறப்பட்டு தனுஷ்கோடி கடல் பகுதியை சென்றடைந்தனர்.

 தகவல் அறிந்த மெரைன் போலீசார் தனுஷ்கோடி கடற்கரை பகுதியிலிருந்து விசாரணைக்காக மூன்று பேரையும் மண்டபம் மரைன் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

images/content-image/2024/07/1720240234.jpg

 விசாணையில் யோக வள்ளி விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அகதி முகாமில் பிறந்தவர் என்றும்,15 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை திரும்பியவருக்கு அங்கே திருமணம் முடிந்து கணவருடன் பிரிந்து வாழ்கிறார்.

 இரண்டு குழந்தைகளுடன் இலங்கையில் வாழ முடியாத சூழலில் வெம்பக்கோட்டை முகாமில் அவரது தாயாருடன் சேர்ந்து வாழ்வதற்காக மீண்டும் தமிழகம் வந்ததாக தெரிய வந்துள்ளது.படகு கட்டணமாக 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் செலுத்தி வந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

images/content-image/2024/07/1720240248.jpg

 விசாரணைக்கு பின்னர் 3 பேரையும் மெரைன் போலீசார் மண்டபத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ஒப்படைக்கப்படைத்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4