தேர்தல் திகதி தொடர்பில் வெளியான அறிவிப்பு : தபால் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
தேர்தல் திகதி தொடர்பில் வெளியான அறிவிப்பு : தபால் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம்!

ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி  ஜூலை 17ஆம் திகதிக்கு பிறகு அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். 

அரசியலமைப்பின் பிரகாரம், ஜூலை 17ஆம் திகதிக்குப் பின்னர், ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதியை அறிவிக்க தபால் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

தேர்தலானது செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 16 வரை நடைபெறும் என தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. 

இதன்படி, தேர்தல்கள் ஆணைக்குழு கூடி ஜனாதிபதி தேர்தலுக்கான சரியான திகதியை தீர்மானிக்கும் என தலைவர் தெரிவித்தார்.  

இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு 2024ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியல் பயன்படுத்தப்பட உள்ளது. வாக்காளர் பட்டியலில் கையொப்பமிடும் பணிகள் இன்னும் சில தினங்களில் மேற்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும்  தெரிவித்துள்ளார்.  

எவ்வாறாயினும், ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்குமாறு கோரி உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

வர்த்தகர் ஒருவரினால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த மனு நாளை (08) பிரதம நீதியரசர் தலைமையிலான ஐவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் பரிசீலிக்கப்படவுள்ளது.  

ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டால், தேர்தல் திகதியை அறிவிக்க முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4