பிரான்ஸ் தேர்தலில் அதிர்ச்சி முடிவுகள்! பல இடங்களில் வன்முறை

#Election #France
Mayoorikka
1 year ago
பிரான்ஸ் தேர்தலில் அதிர்ச்சி முடிவுகள்!  பல இடங்களில் வன்முறை

பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத அதிர்ச்சிக்குரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இடதுசாரி கூட்டணி 182 இடங்களை பெற்று தனிப்பெரும் கூட்டணியாக உருவெடுத்துள்ளது.

 எந்த அணிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல், தொங்கு நாடாளுமன்றம் அமைவதால், தற்போது அனைவரின் பார்வையும் பிரதமர் பதவியை நோக்கியே உள்ளது. அடுத்த பிரதமர் யார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

 நாடாளுமன்ற தேர்தலின் முதல் சுற்றில், தீவிர வலதுசாரி கட்சியான தேசிய பேரணிக் கட்சி (ஆர்என்) முன்னிலையில் இருந்த நிலையில், இறுதி முடிவில் இடதுசாரி கூட்டணியான புதிய பாப்புலர் ஃப்ரண்ட் கூட்டணி அதிக இடங்களைப் பெற்றுள்ளது.

 பிரான்ஸின் டிவி சேனல்களில், தேர்தல் முடிவுகளை காண்பித்தபோது, அதில் தீவிர வலதுசாரி கட்சியான தேசிய பேரணிக் கட்சியின் தலைவர் மரைன் லே பென்னோ, அடுத்த பிரதமாவதற்கு காத்திருந்த அவரது கட்சியை சேர்ந்த ஜோர்டான் பர்டெல்லாவோ வெற்றியை கொண்டாடவில்லை.

 திடீர் திருப்பமாக, இடதுசாரி கூட்டணியே வெற்றியை பெற்றது. யாரும் எதிர்பாராத வகையில் பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மக்ரோங்கின் மையவாத கூட்டணி இரண்டாம் இடத்திற்கு முன்னேறி, தேசிய பேரணிக் கட்சியை மூன்றாம் இடத்திற்கு தள்ளியது.

 தீவிர இடதுசாரி கொள்கை கொண்டவர் என விமர்சகர்களால் அழைக்கப்படும் மூத்த இடதுசாரி தலைவரான ஜாங் லுக் மெலாங்ஷாங் அதிக நேரம் காத்திருக்காமல் தங்களது கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவித்தார். இந்த கூட்டணி 182 இடங்களை பெற்று தனிப்பெரும் அணியாக உருவெடுத்துள்ளது. பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மக்ரோங் திடீரென முன்கூட்டியே தேர்தல்களை அறிவித்த நிலையில், சோசலிஸ்டுகள், கம்யூனிஸ்ட்கள், பசுமைவாதிகள் மற்றும் பிரான்ஸ் அன்பௌட் (LFI) உள்ளடங்கிய இடதுசாரிக் கட்சிகள் புதிய பாப்புலர் ஃப்ரண்ட் கூட்டணியை உருவாக்கின. 

ஆனால், ஆட்சி அமைக்கும் அளவுக்கு இந்த கூட்டணி வெற்றி பெறவில்லை. பிரான்ஸ் அரசியல் தற்போது நிலையற்ற சூழ்நிலைக்கு சென்றுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தெருக்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. பாரிஸ் மற்றும் நான்டெஸ் மற்றும் லியோன் உள்ளிட்ட நகரங்களில் ஒரு சில வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன தற்போது அனைவரின் பார்வையும் பிரதமர் பதவியை நோக்கியே உள்ளது. 

தற்போது உள்ள முட்டுக்கட்டையான நிலையில் அடுத்த பிரதமர் யார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. மக்ரோங் கட்சியைச் சேர்ந்த தற்போதைய கேப்ரியல் அட்டல் பதவி விலகப் போவதாகத் தெரிவித்துள்ளார். தங்கள் கட்சியை சேர்ந்தவரே அடுத்த பிரதமாவார் என மூத்த இடதுசாரி தலைவரான ஜா-லுக் மெரான்ஷன் கூறியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4