பீகாரில் ஒரே நாளில் மின்னல் தாக்கி 12 பேர் உயிரிழப்பு
பீகாரில் கடந்த 24 மணி நேரத்தில் மின்னல் தாக்கியதில் 12 பேர் பலியாகியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவித்துள்ளது.
இதன் மூலம் ஜூலை 1ஆம் தேதி முதல் மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.
உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் நிதிஷ் குமார், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் நிவாரணம் வழங்குவதாக அறிவித்துள்ளார்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது மக்கள் விழிப்புடன் இருக்குமாறும் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் அனர்த்த முகாமைத்துவ திணைக்களத்தின் அறிவுறுத்தல்களை மக்கள் பின்பற்றுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
2018 மற்றும் 2022 க்கு இடையில், மாநிலத்தில் பல்வேறு இயற்கை பேரழிவுகள் மற்றும் விபத்துக்கள் காரணமாக 9,687 இறப்புகள் நிகழ்ந்துள்ளதாக கணக்கெடுப்பு அறிக்கை தெரிவித்துள்ளது.