கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வில் இன்று 7 மனித உடல் பாகங்கள் மீட்பு!

#SriLanka #Mullaitivu
Mayoorikka
2 years ago
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி  அகழ்வில் இன்று 7  மனித உடல் பாகங்கள் மீட்பு!

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணியின் மூன்றாம் கட்டத்தில் ஆறாம் நாள் அகழ்வு இன்று (10.07.2024) இடம்பெற்றது .

 குறித்த அகழ்வின் போது பார்வையாளராக இன்றும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை அலுவலகத்தின் மனித உரிமைகளுக்கான அதிகாரி லூடியானா செல்றினி அகிலன் அவர்களும் இந்த அகழ்வுப் பணிகளை மேற்பார்வை செய்திருந்தார். 

images/content-image/2024/07/1720627241.jpg

 இந்த அகழ்வு பணியின் போது நேற்றும் இன்றுமாக 7 மனித உடல் பாகங்கள் ,சில மனித ஆடைகள் மற்றும் இராணுவத்தால் பாவிக்கப்படும் கம்பி மேலும் சில பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

images/content-image/2024/07/1720627302.jpg

அத்துடன் ஆடைகளில் பெண்களுக்குரிய உள் ஆடைகள் காணப்படுகின்றது தொடர்பான மேலதிக ஆய்வுகள் நாளை நடைபெற இருக்கின்றது.

images/content-image/2024/07/1720627324.jpg

 இன்றைய அகழ்வ பணிகளை பேராசிரியர் சோமதேவா குழுவினர் மேற்கொண்டனர் அத்துடன் சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவா தடயவியல் பொலிஸாசார் உள்ளிட்ட தரப்பினரும் இந்த ஆய்வுகளில் பங்கேற்றிருந்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4