பிரித்தானியாவில் தேடப்படும் முக்கிய குற்றவாளி - மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
பிரித்தானியாவில் 3 பெண்கள் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 26 வயது இளைஞரை பொலிஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பிரித்தானியாவின் Hertfordshire-ல் Bushey பகுதியில் உள்ள வீடு ஒன்றில் செவ்வாய் கிழமை இரவு மூன்று பெண்கள் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டறியப்பட்டனர்.
மாலை 7 மணிக்கு சற்று முன்னதாக ஆஷ்லின் குளோஸ் பகுதியில் சம்பவ இடத்திற்கு விசாரணை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டனர்.
அங்கு உறவினர்கள் எனக் கருதப்படும் மூன்று பெண்கள் கடுமையான காயங்களுடன் காணப்பட்டனர்.
ஆனால் துரதிஷ்டவசமாக அந்த 3 பெண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இச்சம்பவத்தை மூன்று பேர் கொலை செய்யப்பட்ட வழக்கு என கருதி Hertfordshire காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
மேலும் இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடையதாக நம்பப்படும் 26 வயதான கைல் கிளிபோர்ட்டை(Kyle Clifford ) காவல்துறையினர் அவசரமாகத் தேடி வருகின்றனர்.
இவர் Enfield பகுதியைச் சேர்ந்தவர் என்றும், அவர் ஆயுதபாணியாக இருக்கக்கூடும் என்றும் பொலிஸார் எச்சரித்துள்ளனர். அத்துடன் அவரை யாரும் நெருங்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.