நுவரெலியாவிலிருந்து திருகோணமலை சென்ற அதி சொகுசு பஸ் விபத்து: 42 பேருக்கு நேர்ந்த கதி

#SriLanka #Accident #NuwaraEliya
Mayoorikka
2 years ago
நுவரெலியாவிலிருந்து திருகோணமலை சென்ற அதி சொகுசு பஸ் விபத்து: 42 பேருக்கு நேர்ந்த கதி

நுவரெலியாவிலிருந்து திருகோணமலை நோக்கி சுற்றுலா சென்ற அதிசொகுசு பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தானது இன்று (11) அதிகாலை நுவரெலியா - கண்டி பிரதான வீதியில் லபுக்கலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

 விபத்து தொடர்பில் தெரியவருகையில், அதிசொகுசு தனியார் பஸ் பாதையை விட்டு விலகி அருகில் இருந்த பாதுகாப்பு இரும்பு வேலியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து காரணமாக நுவரெலியா - கண்டி பிரதான வீதியில் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டது.

 நுவரெலியா கிரேன் ஹோட்டலில் தொழில் புரியும் ஊழியர்கள் சுற்றுலா சென்ற பஸ்ஸே விபத்துக்குள்ளாகியுள்ளது.

 விபத்தின் போது பஸ்ஸில் பயணம் செய்த சாரதி மற்றும் நடத்துனர் உட்பட 42 பேர் காயமடைந்துள்ளதாகவும் இவர்கள் அனைவரும் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. இதனையடுத்து விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4