கனடாவிலிருந்து நாடு கடத்தப்பட இருந்த விளையாட்டு வீரருக்கு அவகாசம்

#Canada #Player #Athletics
Prasu
4 months ago
கனடாவிலிருந்து நாடு கடத்தப்பட இருந்த விளையாட்டு வீரருக்கு அவகாசம்

கனடாவிலிருந்து நாடு கடத்தப்படவிருந்த விளையாட்டு வீரர் ஒருவர் மற்றும் அவரது குடும்பத்தினர் ஓராண்டு காலம் தங்கியிருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஜமெய்க்காவைச் சேர்ந்த தமாரி லிண்டோ மற்றும் அவரது குடும்பத்தினரே இவ்வாறு நாடு கடத்தப்படவிருந்தனர்.

தாமரி யோர்க் பல்கலைக்கழக மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமாரி மிகச் சிறந்த தடைதாண்டி ஓட்டவீரர் என்பது குறிப்பிடத்தக்கது. போட்டிகளில் பங்குபற்றி பல்வேறு வெற்றிகளை தமாரி ஈட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதம் மொன்றியலில் நடைபெற்ற கனடிய தடகளப் போட்டியில் 110 மீற்றர் தடை தாண்டி ஓட்டப் போட்டியில் தமாரி மூன்றாம் இடத்தை பெற்றுக்கொண்டார்.

ஏதிலிக் கோரிக்கை விண்ணப்பங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் அவர்கள் நாடு கடத்தப்படவிருந்தனர். பியர்சன் விமான நிலையத்திலிருந்து தமாரி மற்றும் குடும்பத்தினர் நாடு கடத்தப்படவிருந்தனர்.

எனினும் இறுதி நேரத்தில் ஓராண்டு காலம் தற்காலிக அடிப்படையில் கனடாவில் வதிவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தாமரி மற்றும் குடும்பத்தினரை நாடு கடத்தும் தீர்மானத்தை மறுபரிசீலனை செய்யுமாறு சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மகஜர் ஒன்றை அரசாங்கத்திடம் வழங்கயிருந்தனர்

 அனைத்து தர்பபினரும் தமக்கு வழங்கிய ஒத்துழைப்பிற்கு நன்றி பாராட்டுவதாக தமாரி தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!