இந்திய வீராங்கனையுடன் பேட்மிண்டன் விளையாடிய ஜனாதிபதி திரவுபதி முர்மு

#India #President #sports
Prasu
3 months ago
இந்திய வீராங்கனையுடன் பேட்மிண்டன் விளையாடிய ஜனாதிபதி திரவுபதி முர்மு

பத்ம விருது பெற்றவர்களுடன் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கலந்துரையாடும் நிகழ்ச்சி குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்று வருகிறது. 

குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள கலாசார மையத்தில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் பத்ம விருது பெற்ற பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் உரையாற்ற உள்ளார். 

இதையொட்டி, குடியரசுத் தலைவர் மாளிகையில் சாய்னா நேவால் நேற்றிரவு தங்கினார். அப்போது, குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள மைதானத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சாய்னா நேவாலுடன் பேட்மிண்டன் விளையாடி மகிழ்ந்தார்.

 பேட்மிண்டன் விளையாட்டின் மையமாக இந்தியா உருவெடுக்க ஊக்கமளிக்கும் வகையில் குடியரசுத் தலைவரின் இந்த செயல் அமைந்துள்ளதாக குடியரசுத் தலைவர் மாளிகை தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!