ஹிருணிகாவின் பிணைக் கோரிக்கையை பரிசீலனைக்கு எடுக்க தீர்மானம்!

#SriLanka #Colombo #hirunika
Mayoorikka
2 years ago
ஹிருணிகாவின் பிணைக் கோரிக்கையை பரிசீலனைக்கு எடுக்க தீர்மானம்!

கொழும்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர, தம்மை பிணையில் விடுவிக்குமாறு கோரி தாக்கல் செய்த மனுவை, ஜூலை 15 இல், பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. 

 இந்த பிணை கோரிக்கை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் இன்று (11)அழைக்கப்பட்ட போது, ​​அரசாங்க சட்டத்தரணியால் இந்த ஆட்சேபனைகள் முன்வைக்கப்பட்டன. அதன் பின்னர், ஹிருணிகா பிரேமச்சந்திரவின் பிணைக் கோரிக்கை மீதான விசாரணை எதிர்வரும் 15ஆம் திகதி நடைபெறும் என நீதிபதி உத்தரவிட்டார்.

 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ஆம் திகதி, தெமட்டகொடை பிரதேசத்தில் கடையொன்றில் பணிபுரிந்த அமில பிரியங்க என்ற இளைஞனை கறுப்பு நிற டிஃபென்டர் வாகனத்தில் கடத்திச் சென்று, தடுத்து வைத்து தாக்கியதாக முன்வைக்கப்பட்ட 18 குற்றச்சாட்டுக்களில் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதால் ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

 தண்டனைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் மேன்முறையீடு செய்துள்ள நிலையில், மேன்முறையீடு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இறுதித் தீர்மானம் எடுக்கும் வரை தன்னை பிணையில் விடுவிக்குமாறு கோரி அவர் இந்த பிணை கோரிக்கையை சமர்ப்பித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4