மருத்துவப் பராமரிப்பு பணி துறையை வலுப்படுத்த நிதி ஒதுக்கீடு - அமைச்சர் விஜய் தணிகாசலம்
எமது மாகாணத்தில், மருத்துவப் பராமரிப்புப் பணித்துறையைப் பலப்படுத்த ஒன்ராறியோ மாகாண அரசு $10 மில்லியன் டாலர்களை ஒதுக்கியுள்ளது.
ஊரகப் பகுதிகளிலும் தொலைதூர மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைப் பிரிவில் 1,000க்கும் மேற்பட்ட மருத்துவ தாதியர்களின் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு 10 மில்லியன் டொலர்களை அளிப்பதன் மூலம் ஒன்ராறியோ தனது சுகாதார அமைப்பை வலுப்படுத்துகிறது.
இத்திட்டம் தொடங்கிய காலத்திலிருந்து இதன்மூலமாக 72 மருத்துவமனைகளிலுள்ள 400 இற்கும் மேற்பட்ட மருத்துவ தாதியர்கள் பயனடைந்துள்ளதுடன், மேலும் இவ்வாண்டில் 163 அவசர சிகிச்சை பிரிவுகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.
"ஒன்ராறியோ வாழ் மக்களுக்கு வீட்டிற்கு அருகாமையிலேயே தீவிர சிகிச்சைக்கான வசதியை உறுதி செய்வதில் எங்கள் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது" என அமைச்சர் விஜய் தணிகாசலம் தெரிவித்தார்.
2018 முதல், அரசாங்கம் 80,000 புதிய தாதியர்களையும், 24,000 இற்கு அதிகமான தனிநபர் மருத்துவப் பராமிப்புப் பணியாளர்களையும் நியமித்துள்ளது.
மேலும் 30,000 தாதியத்துறை மாணவர்கள் தற்போது ஒன்ராறியோ கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் கற்று வருகின்றனர்.
இந்த முதலீடு, சுகாதாரப் பணியாளர் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கும், திறன்களை மேம்படுத்துவதன் மூலம் பணியாளர்களின் தரத்தை மேம்படுத்துவதற்கும் ஒதுக்கப்படும் 743 மில்லியன் திட்டத்தின் ஒரு பகுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது என்றார் அமைச்சர் விஜய் தணிகாசலம்