தமிழகத்தில் மதுவிலக்கு திருத்த சட்டம் அமல்

#India #Tamil Nadu #Alcohol #M.K.Stalin #Amendment
Prasu
4 months ago
தமிழகத்தில் மதுவிலக்கு திருத்த சட்டம் அமல்

தமிழகத்தில் மதுவிலக்கு திருத்த சட்டம் 2024 என்பது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

இந்நிலையில் தான் இந்த மதுவிலக்கு திருத்த சட்டம் 2004ன் படி எந்தெந்த குற்றங்களுக்கு எவ்வளவு ஆண்டு சிறை தண்டனை என்பது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த மாதம் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து 66 பேர் இறந்தனர்.

இதையடுத்து கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் வகையில் தமிழக சட்டசபையில் கடந்த மாதம் 29 ம் தேதி முதல்வர் ஸ்டாலின் மதுவிலக்கு சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். 

ந்த மசோதா குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது. இந்த மதுவிலக்கு சட்ட திருத்த மசோதாவுக்கு நேற்று ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதல் வழங்கினார். 

தையடுத்து இன்று முதல் தமிழகத்தில் மதுவிலக்கு சட்ட திருத்தம் 2024 என்பது அமலுக்கு வந்துள்ளது. 

இந்த மதுவிலக்கு சட்ட திருத்தம் 2024ன் மூலம் கள்ளச்சாராயம் காய்ச்சுவோர் மற்றும் சட்டவிரோத மதுபானம் விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது.

  • 100 லிட்டருக்கு மேல் சட்ட விரோதமாக மதுபானம் ஏற்றுமதி, இறக்குமதி செய்தல் அல்லது வைத்திருத்தல், சட்ட விரோதமாக மதுபானம் தயாரித்தல், சட்ட விரோதமாக மதுபான ஆலை கட்டுவது, விற்பனைக்காக சட்ட விரோதமாக மதுபானங்களை பாட்டில்களை அடைத்தல் போன்ற குற்றங்களுக்கு மூன்று ஆண்டுகள் முதல் ஏழு ஆண்டுகளுக்கு குறைவில்லாத கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் 2- 3 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.
  • 50 லிட்டருக்கு மேல் நூறு லிட்டர் வரையிலான சட்டவிரோதமான மதுபானம் இறக்குமதி, ஏற்றுமதி அல்லது வைத்திருத்தல் குற்றத்திற்கு 2 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரையிலான கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ஒரு இலட்சம் ரூபாய் முதல் இரண்டு இலட்சம் ரூபாய் வரையிலான அபராதம் விதிக்கப்படும்.
  • ஐம்பது லிட்டர் வரையிலான சட்டவிரோதமான மதுபானம் இறக்குமதி, ஏற்றுமதி, அல்லது வைத்திருத்தல், சட்ட விரோதமான மது அருந்துதல் மற்றும் வாங்குதல், உரிமம் இல்லாத இடங்களில் மது அருந்த அனுமதித்தல் ஆகிய குற்றங்களுக்குஓராண்டுக்கு குறையாத 3 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை மற்றும் 50,000/- ரூபாய் முதல் ஒரு இலட்சம் ரூபாய் வரையிலான அபராதம் விதிக்கப்படும்.
  • மதுவை உட்கொள்வதால் இறப்பை ஏற்படுத்தும் சட்டவிரோதமான மதுபானம் தொடர்புடைய குற்றங்களுக்கு இனி ஆயுட்காலத்திற்குக் கடுங்காவல் சிறைத்தண்டனை மற்றும் பத்து இலட்சம் ரூபாய்க்குக் குறையாத அபராதம் விதிக்கப்படும்.
  • மதுவை உட்கொள்வதால் இறப்பை ஏற்படுத்தாத பிற கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும் சட்டவிரோதமான மதுபானம் தொடர்புடைய குற்றங்களுக்கு, இனி 5 -10 ஆண்டுகள் வரையிலான கடுங்காவல் சிறைத்தண்டனை மற்றும் 5 - 10 லட்சம் ரூபாய் வரையிலான அபராதம் என விதிக்கப்படும்.
  • மது அருந்துவதற்கு உரிமம் இல்லாத இடங்களைப் பயன்படுத்தும் குற்றத்திற்குப் புதிய பிரிவாக, அந்தக் குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட இடம் வேறு எவரும் பயன்படுத்தாமல் தடுப்பதற்காகப் பூட்டப்பட்டு, சீல் வைக்கப்படும்.
  • மதுபானம் தொடர்பான விளம்பரங்களைச் செய்தல் குற்றத்திற்கு, 2- 5 ஆண்டுகள் வரையிலான கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் 1 - 2 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.

மேற்கூறிய குற்றங்களில் பயன்படுத்தப்படும் வாகனங்கள் உள்பட அனைத்து அசையும் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்படும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!