முள்ளிவாய்க்கால் சேவைக்காக மண்ணின் மைந்தன் பட்டம்பெற்ற சத்தியமூர்த்தி - மீள்பார்வை (புகைப்படம் இணைப்பு)
கிளி மக்கள் அமைப்பின் மாபெரும் ஒன்றுகூடல் நேற்று லண்டனில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் முள்ளிவாய்க்கால் வைத்தியர் சத்தியமூர்த்தி பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
அவரது அர்ப்பணிப்பான மக்கள் சேவைக்காகவும் கிளிநொச்சி பிரதேச கல்வி வளர்ச்சிக்கு அவர் வழங்கிவரும் பங்களிப்புக்காகவும் கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு வைத்தியர் சத்தியமூர்த்திக்கு 2019ம் ஆண்டுக்கான “மண்ணின் மைந்தன்” விருதை வழங்கியுள்ளனர்.
இலண்டனில் உள்ள தமிழ் கவுன்சில் பிரதிநிதிகள், தமிழ் தொண்டு நிறுவன பிரதிநிதிகள், போர்க்காலத்தில் கடமையாற்றிய வைத்தியர்கள், சேவையாளர்கள், கிளி மக்கள் அமைப்பின் அங்கத்தவர்கள் ஆதரவாளர்கள் என சுமார் ஆயிரம் பார்வையாளர்கள் முன்னிலையில் இந்த விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வு மூலம் 500 துவிச்சக்கர வண்டிகளை சேகரித்து பாடசாலை செல்ல சிரமப்படும் மாணவர்களுக்கு வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில் இந்நிகழ்வின் மூலம் சுமார் 600 வண்டிகளுக்குமேல் சேகரித்துள்ளனர்.
இந்த நிகழ்வில் சிகரம் அமைப்பினர் இசைநிகழ்வினை வழங்கியிருந்தனர்.
KILI PEOPLE அமைப்பு கிளிநொச்சியின் கல்வி வளர்ச்சிக்காக MISSION FOR EDUCATION எனும் சிறப்பு நிகழ்ச்சித்திட்டத்தை செயல்படுத்த தொடங்கியுள்ளமை தெரிந்ததே.