மக்களைக் கொல்வதோ வீடுகளை எரிப்பதோ உண்மையான புரட்சி கிடையாது! ஜனாதிபதி
#SriLanka
#Sri Lanka President
Mayoorikka
10 months ago

மக்களைக் கொல்வதோ வீடுகளை எரிப்பதோ உண்மையான புரட்சி கிடையாது. மாறாக நாட்டில் மக்கள் பெருமையுடன் முன்னோக்கிச் செல்லக்கூடிய சூழலை உருவாக்குவதே உண்மையான புரட்சி என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
தம்புத்தேகம மகாவலி விளையாட்டரங்கில் நேற்று முன்தினம் நடைபெற்ற உறுமய நிரந்தர காணி உறுதி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.
அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ள மகாவலி எச். மற்றும் ஹுருலுவெவ ஆகிய இரண்டு வலயங்களில் உள்ள 9 மகாவலி பிரிவுகளில் 4,012 பேருக்கு இலவச காணி உறுதிகள் வழங்கப்பட்டன. 47 காணி உறுதிகள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அடையாளமாக வழங்கி வைக்கப்பட்டன.



