கனடாவில் தமிழ் இளைஞன் சுட்டுக்கொலை! பொலிஸார் தீவிர விசாரணை

#SriLanka #Canada
Mayoorikka
2 years ago
கனடாவில் தமிழ் இளைஞன் சுட்டுக்கொலை! பொலிஸார் தீவிர விசாரணை

கனடாவில் தமிழ் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இச்சம்பவம் கடந்த சனிக்கிழமை இடம் பெற்றுள்ளது சம்பவத்தில் மீசாலை பகுதியைச் சேர்ந்த செல்வசிங்கம் சுலக்ஷன் வயது 28 இளைஞர் உயிரிழந்துள்ளார் .

 வியாபாரம் போட்டி காரணமாக தமிழ் இளைஞர் மீது இனம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் குறித்த இளைஞர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் டொரான்டோவில் இரு வர்த்தக குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலை அடுத்து இந்தச் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 உயிரிழந்தவரின் தந்தை சில வருடங்களுக்கு முன்னர் கனடா சென்று தொழில் நடவடிக்கைகளை ஆரம்பித்ததுடன் மகனும் கல்வியை தொடரும் போது வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.

 வியாபார இடத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக வர்த்தகர்கள் இரு தரப்பினராகப் பிரிந்து அவர்களில் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இந்நிலையில், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை டொரான்டோ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4