லண்டன் தமிழ் நிலையத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா வெகு விமர்சை!
லண்டனில் இயங்கி வரும் தனித்துவமான தமிழ் பாடசாலைகளில் ஒன்றான லண்டன் தமிழ் நிலையத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்றைய தினம் மிக விமர்சையாக இடம்பெற்றது.
இந்த விழாவில் குறித்த தமிழ் பாடசாலையில் கல்விகற்கும் மாணவர்களிடையே நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
அத்தோடு குறித்த பரிசளிப்பு விழாவில் மாணவர்களினால் பேச்சு, பாடல், குழுப் பாடல், நாடகம் போன்ற கலை நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன.
இந்த விழாவிற்கு ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாண்வர்களது உறவினர்கள் என தமிழ் ஆர்வர்கள் பலர் பங்குபற்றியிருந்தனர்.
தற்பொழுது இவ்வாறான தமிழ் பாடசாலைகள் மூலம் புலம்பெயர் தமிழ் மாணவர்களிடையே தமிழ் பேசும் ஆற்றலும் அறிவும் மேலோங்கி இருப்பதை காணக் கூடியதாகவுள்ளது.
இதன்மூலம் தமிழ் மாணவர்களுக்கு தமிழ் மொழி மீதான பற்று அதிகரித்து வருவதையும் அவதானிக்க முடிகின்றது. லண்டனில் உள்ள பழமையான தமிழ் பாடசாலைகளில் ஒன்றான லண்டன் தமிழ் நிலைய பாடசாலை தமிழ் மாணவர்களிடையே தமிழ் மொழி அறிவை வளர்ப்பதற்காக பெரும் பங்காற்றி வருகின்றது.
இப்பாடசாலையில் பெருமளவான தமிழ் மாணவர்கள் கல்வி கற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.