நாளை ஆடிப் பிறப்பு: ஆடிட் கூழ் செய்வது எப்படி?

#SriLanka #Food #Tamil Food
Mayoorikka
4 months ago
நாளை ஆடிப் பிறப்பு: ஆடிட் கூழ் செய்வது எப்படி?

ஆடிப் பிறப்பிற்கு நாளை விடுதலை ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே..கூடிப் பனங்கட்டிக் கூழும் குடிக்கலாம் கொழுக்கடடையும் தின்னலாம் தோழர்களே.... ஆம் நாளையதினம் ஆடிப் பிறப்பு. 

ஆடிப்பிறப்பு என்றாலே தமிழர்களை பொறுத்தவரையில் ஆடிக் கூழ் முக்கியம் பெறுகிறது. அந்தவகையில் ஆடிட் கூழ் எப்படி செய்யலாம் என பார்ப்போம்: 

 ஆடிக்கூழ் தேவையான பொருட்கள்:

 750 கிராம் பனங்கட்டி

 1 ¼ கப் சிவப்பு பச்சை அரிசி

 ½ கப் முழுப் பயறு

 ½ கப் வறுத்த உளுத்தம் மா

 ½ கப் தேங்காய் சொட்டு 2 ரின் தேங்காய்ப்பால் (400 மி.லீ x 2) 3 ¼ லீட்டர் தண்ணீர் (-/+) ½ மே.க மிளகு(-) உப்பு

 செய்முறை: 

 அரிசியை குறைந்தது 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். அடுத்ததாக தண்ணீரை வடித்து, வடியில் வார விடவும். வாரவிட்ட அரிசியை மிக்சியில் அரைத்து, அரிதட்டால் அரித்து எடுக்கவும்( மிளகு சேர்க்க விரும்பினால் அரிசியுடன் சேர்த்து அரைக்கவும்). 

images/content-image/2024/07/1721087950.jpg

மாவை இரு பங்குகளாக பிரித்து வைக்கவும். தேங்காயில் சின்னச் சின்ன சொட்டுகளாக ½ கப் சொட்டுகள் வெட்டி வைக்கவும். ஒரு பாத்திரத்தில் பனங்கட்டியுடன் 1 லீட்டர் தண்ணீர் சேர்த்து, கரையும் வரை கொதிக்க விடவும்.

 முழுப்பயரை வறுத்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் 2 லீட்டர் தண்ணீர் விட்டு, கொதித்ததும், வறுத்த பயறைச் சேர்த்து அவிய விடவும். பயறு அரைப்பங்கு அவிந்ததும் அதனுள் பனங்கட்டிப்பாணியை வடித்து விடவும்.

 அரைப்பங்கு அரிசிமாவுடன் உளுத்தம்மா, 1 சிட்டிகை உப்பு சேர்த்துக் கலந்து, 1 கப் தண்ணீர் விட்டு கட்டிகள் இல்லாமல் கரைத்து வைக்கவும். 

 மீதமுள்ள மாவில் 1 சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து, கொதித்த பனங்கட்டிப்பாணியை கொஞ்சம் கொஞ்சமாக விட்டுக் குழைத்து எடுத்து, அதனை சிறிய சில்லுகளாக தட்டவும் அல்லது உருண்டைகளாக உருட்டி வைக்கவும். பயறு அவிந்தவுடன் அதனுடன் தட்டிய சில்லுகள் அல்லது உருட்டிய மா உருண்டைகளை ஒவ்வொன்றாக சேர்த்து அவியவிடவும். 

அதனுடன் தேங்காய்ப்பால் மற்றும் தேங்காய்ச் சொட்டுகளையும் சேர்த்து அவியவிடவும். சில்லுகள் / உருண்டைகள் அவிந்ததும், உளுத்தம்மா கரைசலை விட்டு கைவிடாமல் கிண்டவும். கொதித்து இறுகத்தொடங்கவும் அடுப்பில் இருந்து இறக்கி பரிமாறவும். ஆடிக் கூழ் தயார்! 

images/content-image/2024/07/1721087979.jpg

குறிப்பு: கூழ் சிறிது தண்ணித் தன்மையாக வேண்டும் என்றால் 1 கப் அரிசி எடுக்கவும். பயறு அதிகம் விரும்பாதவர்கள், 6 மே.க பயறு சேர்க்கவும். 

சில்லுகள் / உருண்டைகள் அதிகம் விரும்பாதவர்கள் 2/3 பங்கு மாவை கரைத்தும் மீதி 1/3 பங்கு மாவில் சில்லுகள் / உருண்டைகளை செய்யவும். வறுத்த உளுத்தம் மா, தேங்காய் சொட்டு மற்றும் பயற்றின் அளவை, உங்கள் ருசிக்கேற்ப்ப கூட்டிப் குறைக்கவும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!