இணையத்தில் வைரலாகும் ராயன் திரைப்பட டிரைலர்

#TamilCinema #trailer #Kollywood
Prasu
3 months ago
இணையத்தில் வைரலாகும் ராயன் திரைப்பட டிரைலர்

தனுஷ் நடித்து இயக்கியுள்ள படம் ராயன். கலாநிதிமாறனின் சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. 

ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் உலகம் முழுவதும் வருகிற 26-ந்தேதி ரிலீஸ் ஆகிறது. 

இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் இன்று வெளியானது. டிரைலர் தொடக்கத்தில் செல்வராகவன் தனுஷிடம் காட்டுல ஆபத்தான மிருகம் எது தெரியுமா? என கேட்பது போல் டிரைலர் தொடங்குகிறது. 

அதன்பின் வெட்டுக்குத்து என நகர்கிறது. எஸ்ஜே சூர்யா தைரியம் இருந்தால் எனது இடத்தில் வந்து செய்யப்பட்டும் என கர்ஜிக்க, அதன்பின் தனுஷ் ரவுடி கூட்டத்தை வேட்டையாடுவது போன்று முடிவடைகிறது.

டிரெய்லரில் எஸ்ஜே சூர்யா கேங்ஸ்டாராக வருகிறார். பிரகாஷ் ராஜ், சரவணன், சந்திப் கிஷாண், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் வருகின்றனர்.

 படத்தில் எஸ்.ஜே. கேங்ஸ்டாராக படம் மூலம் மிரட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தனுஷ், சந்திப் கிஷாண், காளிதாஸ் ஜெயராம் ஆகியோருக்கும் எஸ்.ஜே. சூர்யாவுக்கும் இடையிலான பிரச்சனை படமாக நகரும் என எதிர்பார்க்கலாம்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!