நிதி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்க சந்திப்பு!

#SriLanka
Mayoorikka
2 years ago
நிதி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்க சந்திப்பு!

நிதி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (17) நடைபெறவுள்ளது.

 ஜனாதிபதி தேர்தலை அறிவிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு கிடைத்துள்ள நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. தேர்தல் தொடர்பான பல அடிப்படை ஆவணங்கள் அச்சடிக்க ஏற்கெனவே ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்கான செலவு மதிப்பீடு 10 பில்லியன் ரூபாயாகும். அந்த பணத்தை வழங்குவது மற்றும் ஜனாதிபதி தேர்தலுக்காக பணத்தை திறைசேரியில் இருந்து உரிய நேரத்தில் விடுவிப்பது தொடர்பிலான விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட உள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4