டொரன்டோவில் சீரற்ற காலநிலை காரணமாக போக்குவரத்து பாதிப்பு
கனடாவின் ரொறன்ரோ நகரில் பாரியளவில் மழை வெள்ளத்தினால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் கூடுதல் அளவிலான பாதிப்பு பதிவாகியுள்ளது.
டோன்வெலி போன்ற பகுதிகளில் பாரியளவில் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் காரணமாக சில இடங்களில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மழை வெள்ளத்தினால் நகரின் சில அதிவேக நெடுஞ்சாலைகள் மூடப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. சுமார் நூறு மில்லி மீற்றருக்கு மேல் மழை பெய்ததாகத் கனடிய சுற்றாடல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக ரொறன்ரோவின் 170000 வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.வெள்ளத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் இதுவரையில் கண்டறியப்படவில்லை.
இதேவேளை, கனடாவின் அநேக பகுதிகளில் கடுமையான வெப்பநிலை நிலவும் என எதிர்வுகூறப்பட்டிருந்த நிலையில் ரொறன்ரோவில் இவ்வாறு ம வெள்ளம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.