தற்பொழுது உள்ளவரே சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு பதில் அத்தியட்சகர்! சுகாதார அமைச்சு
#SriLanka
#Chavakachcheri
Mayoorikka
2 years ago
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகராக தற்போது உள்ளவரே என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் புதன்கிழமை (17) இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களின் கேள்விக்கு பதிலளித்தபோதே சுகாதார அமைச்சர் இதனை தெரிவித்தார்.
சாவகச்சேரி வைத்தியசாலையில் தற்பொழுது நியமனம் பெற்று கடமையில் இருக்கும் அதிகாரியே வைத்தியசாலையின் தற்போதைய பதில் வைத்திய அத்தியட்சகர் என அமைச்சர் தெரிவித்தார்.
வைத்தியர் கே. ரஜீவ் புதிய பதில் வைத்திய அத்தியட்சகராக 09ஆம் திகதி நியமிக்கப்பட்டு கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே