50000 மக்களுக்கு இலவச காணி உறுதி பத்திரங்கள் வழங்கிவைப்பு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
பொருளாதார நெருக்கடியின் போது மக்கள் தமது அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்திருந்ததன் காரணமாகவே இன்று மக்களுக்கு இலவச காணி உறுதிகளை வழங்கக்கூடிய சூழல் உருவாகியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாவட்டத்தில் குறைந்த வருமானம் பெறும் வீட்டு உரிமையாளர்களுக்கு இலவசப் பத்திரங்களை வழங்கும் ரந்தோர உறுமய வடசஹன நிகழ்வில் கலந்து கொண்ட போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
மேல் மாகாணத்தை சுமார் 50 இலட்சம் மக்கள் வாழும் பெரிய நகரமாக அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இதேவேளை இந்நிகழ்வின்போது 50 ஆயிரம் மக்களுக்கு காணி உரிமைகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே