இலங்கையை சுற்றியுள்ள கடற்பரப்புகள் கொந்தளிப்பாக காணப்படும்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
இலங்கையை சுற்றியுள்ள கடற்பரப்புகள் கொந்தளிப்பாக காணப்படும்!

நாளை (19) பிற்பகல் 1 மணி வரை கடல் கொந்தளிப்பாக இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பரப்புகளிலும் ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 தொடக்கம் 65 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

மேலும் கடல் பகுதிகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு ஊடாக காங்கசந்துறை வரையிலும் புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலும் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 50 தொடக்கம் 55 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் எனவும் அவ்வப்பொழுது கடற்பரப்பு கொந்தளிப்பாக காணப்படும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

இந்நிலையில்  மீனவ மற்றும் கடல்சார் சமூகத்தினர் அவதானம் செலுத்துமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் தனது அறிவிப்பில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4