இத்தாலி பிரதமரை கேலி செய்த பத்திரிகையாளருக்கு அபராதம்

#Prime Minister #Women #Social Media #Germany
Prasu
4 months ago
இத்தாலி பிரதமரை கேலி செய்த பத்திரிகையாளருக்கு அபராதம்

இத்தாலி நாட்டின் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் உயரம் குறித்து கிண்டலடித்த அந்நாட்டு பெண் பத்திரிகையாளருக்கு நீதிமன்றம் 5000 யூரோக்கள் அபராதம் விதித்துள்ளது. 

இத்தாலியில் சுயாதீன பத்திரிகையாளராக செயல்பட்டு வரும் கோர்டீஸே கடந்த 2021 இல் தனது எக்ஸ் பக்கத்தில் தற்போதைய பிரதமர் மெலோனியின் பின்னணியில் இத்தாலிய சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினி இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு மெலோனியின் உயரம் குறித்து கிண்டலடிக்கும் வகையில் பதிவிட்டடிருந்தார்.

'நீ என்னை பயமுறுத்த முடியாது,மெலோனி.. நீ வெறும் 1.2 மீட்டர் [4 அடி] உயரம்தான். என்னால் உன்னை பார்க்க கூட முடியவில்லை' என்றும் கோர்ட்டிஸே எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார். 

எக்ஸ் தளத்தில் மட்டுமின்றி பல்வேறு சமூக ஊடகங்களிலும், உள்ளூர் ஊடகங்களிலும் அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். 

இந்த கருத்து தொடர்பாக இருவருக்குமிடையில் சமூக வலைதளத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் மெலோனி கோர்டீஸே மீது நீதிமன்றத்தில் உருவ கேலி வழக்கு தொடுத்திருந்தார். 

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த மிலான் நீதிமன்றம் தற்போது கோர்டீஸே -கு 5000யூரோக்கள் [ ரூ.4.5 லட்சம்] அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!