திருகோணமலை - மட்டக்களப்பு வீதியில் குடைசாய்ந்த பேருந்து!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
திருகோணமலை - மட்டக்களப்பு வீதியில் குடைசாய்ந்த பேருந்து!

திருகோணமலை - மட்டக்களப்பு வீதியின் கெங்கே பாலத்திற்கு அருகில் இன்று (19) மாலை தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது. 

பேருந்தில் பயணித்த பயணிகள், சாரதி உட்பட 51 பேர் காயமடைந்து மூதூர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

யாழ்பாணத்தில் இருந்து கதிர்காமம் நோக்கி யாத்திரிகர்கள் குழுவொன்றை ஏற்றிக்கொண்டு பேருந்து பயணித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4