பங்காளாதேஷில் தங்கியுள்ள இலங்கை மாணவர்கள் தொடர்பில் வெளியான தகவல்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
பங்காளாதேஷில் தங்கியுள்ள இலங்கை மாணவர்கள் தொடர்பில் வெளியான தகவல்!

பங்களாதேஷில் நிலவும் அமைதியின்மை காரணமாக பங்களாதேஷில் தங்கியுள்ள இலங்கை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.  

நாட்டிலுள்ள 03 பல்கலைக்கழகங்களில் சுமார் 50 இலங்கை மாணவர்கள் கல்வியில் ஈடுபட்டு வருவதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. 

பங்களாதேஷில் இடம்பெற்று வரும் போராட்டங்கள் காரணமாக பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளதாலும் வெளிநாட்டு மாணவர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு அறிவிக்கப்படாததாலும் இலங்கை மாணவர்கள் பாதுகாப்பாக விடுதிகளில் தங்கி இருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.  

பங்களாதேஷில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் மாணவர்களைச் சந்தித்து அவர்களின் தேவைகளை நேரில் பார்வையிட்டதுடன் மாணவர்களின் பாதுகாப்பு குறித்து பல்கலைக்கழக நிர்வாகத்துடன் கலந்துரையாடியுள்ளார்.  

அரசாங்கத்தின் வேலை ஒதுக்கீட்டு முறையை மாற்றக் கோரி மாணவர்கள் நடத்தும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளதால் வங்கதேசம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் இதுவரை 105 பேர் உயிரிழந்துள்ளதாகவும், நேற்று (19) மாத்திரம் 52 ஆர்ப்பாட்டக்காரர்கள் உயிரிழந்துள்ளதாகவும்  வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக இராணுவப் படையினர் வரவழைக்கப்பட்டுள்ள போதிலும், மாணவர் சங்கப் பிரதிநிதிகள் தமது போராட்டங்களைத் தொடரவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். 

போராட்டக்காரர்களின் மரணத்திற்குப் பொறுப்பேற்று பிரதமர் ஷேக் ஹசீனா உடனடியாக பதவி விலக வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கூறுகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4