ஜனாதிபதித் தேர்தல்! வெள்ளியன்று உத்தியோகபூர்வமாக திகதி அறிவிக்கப்படும்

#SriLanka #Election #Election Commission
Mayoorikka
2 years ago
ஜனாதிபதித் தேர்தல்!  வெள்ளியன்று உத்தியோகபூர்வமாக திகதி அறிவிக்கப்படும்

ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 இதன்படி, எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு (26) முன்னர் உத்தியோகபூர்வமாக திகதி அறிவிக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் கூட்டம் எதிர்வரும் புதன்கிழமை (24) அல்லது வியாழக்கிழமை (25) நடைபெறவுள்ளது.

 கூட்டத்தின் பின்னர் தேர்தல் திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

 ஜனாதிபதி தேர்தலை நடத்துவது தொடர்பில் இந்த சந்திப்பில் விரிவாக ஆராயப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலை அறிவிக்கும் அதிகாரம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைத்து இன்றுடன் (23) ஆறு நாட்கள் நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4