தேசபந்து தென்னகோனுக்கு உச்சநீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
தேசபந்து தென்னகோனுக்கு உச்சநீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றுவதைத் தடுக்கும் வகையில் உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

 இதன்படி, இந்த இடைக்கால உத்தரவு அமுலில் இருக்கும் காலப்பகுதியில் பொலிஸ் மா அதிபர் பதவிக்கு சட்டத்திற்கு அமைய பொருத்தமான நபரை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யசந்த கோதாகொட,  அச்சல வெங்கப்புலி மற்றும்  மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவுகளை அறிவித்துள்ளது.  

மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் தலைவர் திரு. நீதியரசர் யசந்த கோதாகொட, இந்த மனு விசாரணையில் நீதிமன்றத்தின் முன் வலுவான வழக்கை நிறுவுவதில் மனுதாரர்கள் வெற்றி பெற்றுள்ளனர் என்று கூறினார்.  

இதன்படி, குறித்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள ஜனாதிபதி சார்பில் சட்டமா அதிபர், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் தேசபந்து தென்னகோன் ஆகியோருக்கு எதிராக வழக்கு விசாரணை நடத்த நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. 

மேலும், இந்த மனு மீதான விசாரணை முடியும் வரை, பிரதிவாதியான தேஷ்பந்து தென்னகோன், பொலிஸ் மா அதிபராக செயற்படுவதற்கும், தனது அதிகாரங்களை பிரயோகித்து, கடமையாற்றுவதற்கும் இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது. பெஞ்ச் குறிப்பிட்டது. 

அதன்பிறகு, மனுக்கள் தொடர்பாக ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால், அவற்றை 6 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், நவம்பர் 11 ஆம் தேதி மீண்டும் மனுக்களை விசாரிக்கவும் உத்தரவிட்டனர்.  

தேஷ்பந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமித்த ஜனாதிபதியின் தீர்மானத்தை இரத்துச் செய்யும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி அதிமேதகு கர்தினால் மல்கம் ரஞ்சித் மற்றும் ஏனைய பங்குதாரர்கள் சமர்ப்பித்த 09 அடிப்படை உரிமை மனுக்களை விசாரணைக்கு ஏற்று உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4