250 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினால் கைது: நடவடிக்கை வேண்டும் என்கின்றார் ஸ்டாலின்

#SriLanka #Tamil Nadu #Arrest #Fisherman #NavyOfficers
Mayoorikka
2 years ago
250 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினால் கைது: நடவடிக்கை வேண்டும் என்கின்றார் ஸ்டாலின்

இந்த ஆண்டு ஜனவரி முதல் தற்போது ஜூலை 22-ம் நாள் வரை மட்டும் இந்திய மீனவர்கள் 250 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கடந்த 10 ஆண்டுகளில், ஆண்டொன்றில் மேற்கொள்ளப்பட்ட மிக அதிகபட்ச கைது எண்ணிக்கை இதுவாகுமென தமிழக முதல்வர் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். 

 “இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தி வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார் மீனவர்கள் இதுபோன்று அச்சுறுத்தப்படுவதும், கைது செய்யப்படுவதும் மற்றும் அவர்களது மீன்பிடிப் படகுகள், கருவிகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ந்து தடையின்றி நடைபெற்று வருகிறது. இதனால் மீனவ மக்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

 எனவே, இந்த நிலைமையைத் தணித்திட உரிய தூதரக முயற்சிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டுமென்றும், பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து இலங்கையிலிருந்து 87 மீனவர்களையும், 175 படகுகளையும் விரைவாக விடுவித்திடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி உங்களை கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4