மொனராகலையில் இடம்பெற்ற கோர விபத்து : இருவர் படுகாயம்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
மொனராகலையில் இடம்பெற்ற கோர விபத்து : இருவர் படுகாயம்!

மொனராகலை சியம்பலாண்டுவ பிரதான வீதியில் தொம்பகஹவெல பொலிஸ் எல்லைக்குட்பட்ட தொம்பகஹவெல எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற பயங்கர விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.  

பொலிரோ ரக கெப் வண்டியும் மோட்டார் சைக்கிள்களை ஏற்றிச் சென்ற லொறியும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. 

விபத்தின் பின்னர், கெப் வண்டியின் சாரதியும் அதில் பயணித்த மற்றுமொரு நபரும் வண்டிக்குள் சிக்கிக் கொண்டதையடுத்து, அருகில் இருந்தவர்கள் இருவரையும் காப்பாற்ற பெரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.  

விபத்தில் படுகாயமடைந்த இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இருவரும் மஹகளுகொல்ல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். 

விபத்து தொடர்பில் லொறியின் சாரதி தொம்பகஹவெல பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தொம்பகஹவெல பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4