அமெரிக்காவில் இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக வலுக்கும் போராட்டம்
இஸ்ரேல், காசா நகரின்மீது கடந்த 9 மாதங்களாக நடத்திவரும் தாக்குதலில் 39,175 பாலஸ்தீனிய மக்கள் கொள்ளப்பட்டுள்ளனர். 90,000 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
பாலஸ்தீன இஸ்ரேல் போர் ஆபத்தான கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஜோ பைடன் மற்றும் அமெரிக்க தலைவர்களிடம் பேசுவார்த்தை நடத்த அமெரிக்கா வந்துள்ளார்.
நெதன்யாகுவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போரை எதிர்க்கும் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனிய ஆதரவாளர்கள் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தலைநகர் வாஷிங்க்டன் யூனியன் கட்டிடத்தின்முன் திரண்ட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாலஸ்தீன கொடியைக் கையில் ஏந்தியபடி ஊர்வலமாக வந்து நெதன்யாகுவுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
நெதன்யாகு வை கைது செய்யுங்கள், இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கும் நிதியை நிறுத்துங்கள். நெதன்யாகு நீ உள்ளே ஒளிந்துகொள்ள முடியாது, நீ செய்வது இனப்படுகொலை என்று கோஷம் எழுப்பினர்.
சில போராட்டக்காரர்கள் நேதன்யாகு நகருக்குள் நுழையும் வழியிலும் மறியல் செய்தனர். இதனால் போராட்டக்கார்கள் மீது போலீஸ் கடுமையான அடக்குமுறையை உபயோகப்படுத்தியது.
நகரின் சுவர்க்ளிலும், கொலம்பஸ் உள்ளிட்டவர்களின் சிலைகளிலும் கிராஃபிட்டி வரைந்து தங்களின் எதிர்ப்பை போராட்டக்காரர்கள் வெளிப்படுத்தினர். கைகளில் ரத்தத்துடன் ஜோ பைடன் நிற்கும் படங்களை போராட்டத்தில் பங்கேற்ற கலைஞர்கள் வரைந்தனர்.