மகாராஷ்டிராவில் இடிந்து விழுந்த கட்டிடம் : இடிபாடுகளில் பலர் சிக்கியிருக்கலாம் என அச்சம்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
8 months ago

மகாராஷ்டிராவில் பலத்த மழை பெய்து வரும் நிலையில் நவி மும்பையில் ஷாபாஸ் கிராமத்தில் இன்று 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது.
இந்த கட்டிட விபத்தில் பலர் சிக்கிக்கொண்டனர். இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் போலீசார், தீயணைப்பு படையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த கட்டிடத்தில் 24 குடும்பங்கள் வசித்து வந்ததாக தகவல் வெளியாகி உள்ளன.
இதுதொடர்பாக நவி மும்பை மாநகராட்சி ஆணையர் கைலாஸ் ஷிண்டே கூறுகையில், இன்று அதிகாலை 5 மணியளவில் கட்டிடம் இடிந்து விழுந்ததாக தெரிவித்தார். 2 பேர் மீட்கப்பட்டதாகவும் மேலும் பலர் இதில் சிக்கி இருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.



