மாகாண மட்ட பாடசாலைகளுக்கிடையிலான சதுரங்க போட்டி ஆரம்பம்!
#SriLanka
#sports
Mayoorikka
2 years ago
இலங்கை பாடசாலைகள் சதுரங்க சங்கம் வடமாகாணம் ஏற்பாட்டில் மாகாண மட்ட பாடசாலைகளுக்கிடையிலான சதுரங்க போட்டி இன்று (27.07.2024)காலை 8.30மணியளவில் கிளி/பளை மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)மற்றும் கிளி/பளை இந்து ஆரம்ப பாடசாலைகளில் ஆரம்பமாகியிருந்தது.
குறித்த போட்டியானது இன்று (27)மற்றும் நாளை (28)ஆகிய தினங்களில் இடம்பெறவுள்ளதெனவும் அதன் ஆரம்ப நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இப்போட்டியில் வடமாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலை சதுரங்க விளையாட்டு வீர மாண மாணவிகள் கலந்துகொண்டிருந்தனர் இறுதி போட்டி நாளை இடம்பெற்று நாளை (28)மாலை கிளி/பளை மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) யில் பரிசளிப்பு நிகழ்வும் இடம்பெறும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே