நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணி நேரத்தில் 720 பேர் கைது
#SriLanka
#Police
#island
#drugs
Prasu
2 years ago
நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 720 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்களில் 702 ஆண்களும் 18 பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களில் 21 பேர் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், 27 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து 190 கிராம் 286 மில்லிகிராம் ஹெரோயின், 220 கிராம் ஐஸ், 1128 கிராம் 026 மில்லிகிராம் கஞ்சா , 307 போதை மாத்திரைகள் மற்றும் 24,741 கஞ்சா செடிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே